பதிவு செய்தால் உடனே கிடைக்கும் ஹோண்டா அமேஸ்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஹோண்டா டீலர்களில் அமேஸ் கார் உடனடியாக டெலிவிரி கொடுக்கப்படுகிறது. விற்பனைக்கு கொண்டு வந்த புதிதில் அமேஸ் காருக்கு 4 முதல் 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீண்டிருந்தது.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அமேஸ் காரை வாங்குவதற்கு பதிவு செய்பவர்களுக்கு உடனடியாக டெலிவிரி பெறும் வாய்ப்புள்ளது. நாம் போட்ட விசாரணையில் இது உறுதியாகியுள்ளது.

டீலர்களில் உறுதி
தமிழகத்தில் சில ஹோண்டா டீலர்களில் இது குறித்த விசாரணை செய்ததில், அமேஸ் காரின் டாப் வேரியண்ட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு உடனடியாக கார் டெலிவிரி வழங்குவதாக டீலர்களில் தெரிவிக்கின்றனர். பெட்ரோல், டீசல் என இரு மாடல்களையும் உடனே டெலிவிரி பெறலாம் என தெரிவிக்கின்றனர்.

சென்னை நிலவரம்
சென்னையில் உள்ள பிரபல ஹோண்டா டீலரில் அமேஸ் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு ஓரிரு நாளில் டெலிவிரி கொடுப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில்...
இதேபோன்று தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள ஹோண்டா டீலர்களிலும் அமேஸ் காருக்கு ஒரு வாரத்திற்குள் டெலிவிரி கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

பெங்களூர்
பெங்களூரில் உள்ள சில டீலர்களிலும் அமேஸ் காரை ஒரு வாரத்திற்குள் டெலிவிரி கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரேடியோவிலும் சமீபத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.

உற்பத்தி அதிகரிப்பு
அமேஸ் கார் விற்பனைக்கு வந்தபோது காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை இருந்தது. இதனை குறைக்கும் விதமாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா ஆலையில் 3 ஷிப்டுகளிலும் தற்போது கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறைத்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








