அதற்குள் அமேஸ் விலையை உயர்த்திய ஹோண்டா!

வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை அமேஸ் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, ஹோண்டா சிஆர்-வி விலையும் ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த 1ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஹோண்டா டீலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த தகவலை ஹோண்டாவின் விற்பனை பிரிவு அதிகாரி ஞானேஸ்வர் சென்னும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பிரியோ, சிட்டி, அக்கார்டு கார்களின் விலை கடந்த ஏப்ரலில் உயர்த்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








