2ம் காலாண்டில் 20,000 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை

கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட அமேஸ் காம்பெக்ட் செடான் கார் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
ஹோண்டாவின் பிராண்டு மதிப்புடன், அந்த நிறுவனத்தின் முதல் டீசல் கார் என்பதால் துவக்கம் முதலே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
சிறந்த மைலேஜ், அதிக இடவசதி போன்றவையும் அமேஸ் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேரியண்ட்டுக்கு தக்கவாறு ஹோண்டா அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை நீள்கிறது.
இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை 20,076 கார்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
சிட்டி, பிரியோ என எந்த மாடலும் குறிப்பிடத்தக்க அளவு விற்பனையில் கைகொடுக்காத நிலையில், அமேஸ் கார் அந்த நிறுவனத்தின் விற்பனையில் 60 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








