பிரியோ, சிட்டி கார்களின் விற்பனையை விழுங்கிய அமேஸ்

அமேஸ் வருகை எதிரொலியால் பிரியோ, சிட்டி காரின் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலும் பிரியோ, சிட்டி காரின் விற்பனை ஓரளவு நன்றாக இருந்தது. கடந்த மாதம் அமேஸ் விற்பனைக்கு வந்தபின் அந்த இரு கார்களின் விற்பனை பெரும் பாதிப்படைந்துள்ளது.
கடந்த ஜனவரியில் 2,336 பிரியோ கார்களையும், 2,898 சிட்டி கார்களையும் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. பிப்ரவரியில் 2,916 பிரியோ கார்களும், 3,271 சிட்டி கார்களும் விற்பனையானது. அடுத்து நிதி ஆண்டின் இறுதி மாதமான மார்ச்சில் 3,917 பிரியோ கார்களும், 3,432 சிட்டி கார்களையும் ஹோண்டா விற்பனை செய்திருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் அமேஸ் வந்தபின் மொத்தம் 1,628 பிரியோ கார்களும், 1,917 சிட்டி கார்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதேநேரத்தில், 5,000 அமேஸ் கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக ஹோணடா தெரிவித்துள்ளது.
டிசையர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பிரியோ, சிட்டியின் விற்பனையில் அமேஸ் கார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது ஹோண்டாவுக்கு இக்கட்டான நிலையை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








