ஹோண்டாவின் புதிய எம்பிவி காரின் மாதிரி படங்கள்
பிரியோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் புதிய கார் மாடல்களை ஹோண்டா இறக்கி வருகிறது. கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த அமேஸ் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பிரியோ அடிப்படையில் புதிய எம்பிவி காரை ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டாவின் இந்தோனேஷிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த புதிய எம்பிவி கார் வடிவமைக்கப்படுகிறது.
ஜப்பானிய எஞ்சினியர்கள் மேற்பார்வையில் அங்கு உருவாக்கப்பட்டு வரும் இந்த காரின் பின்புறம் டெயில்லைட் உள்ளிட்டவை சிஆர்வி எஸ்யூவி போன்றே இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் உற்பத்தி நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஹோண்டாவின் புதிய எம்பிவி காரின் மாதிரி படங்களை இந்தோனேஷியாவை சேர்ந்த துமோட்கிட்டா என்ற வலைப்பூ வெளியிட்டு இருக்கிறது.

எஞ்சின்
1.5 லிட்டர் ஐடிடெக் டீசல் எஞ்சினுடன் வருவது உறுதியாகியுள்ளது. பிரியோ, அமேஸ் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்படலாம் என நம்பப்படுகிறது. ஆனால், உறுதியான தகவல்கள் இல்லை.

முதல் தரிசனம்
வரும் செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மோட்டார் ஷோவில் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

போட்டியாளர்
மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகிய கார்களுக்கு இந்த புதிய எம்பிவி கார் நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








