மார்ச்சில் 2,552 அமேஸ் கார்கள் விற்பனை: ஹோண்டா தகவல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11,016 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா கடந்த மாதம் மொத்தம் 7522 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை பட்டியலில் அமேஸ் காரையும் சேர்த்து கணக்கு தெரிவித்துள்ளது ஹோண்டா.
கடந்த மாதம் 2,522 அமேஸ் கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதால் அதனையும் மார்ச் விற்பனை பட்டியலில் சேர்த்து ஹோண்டா தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் ஹோண்டாவின் கார் விற்பனை 9 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
கடந்த மாதம் விற்பனை சரிவு கண்ட போதிலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரையிலான நிதியாண்டு காலத்தில் ஹோண்டா கார் விற்பனை 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
2011-12ம் ஆண்டுகளுக்கிடையிலான நிதி ஆண்டில் 54,427 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், 2012-13ம் ஆண்டுக்கு இடையிலான கடந்த நிதி ஆண்டில் 73,483 கார்களை விற்பனை செய்து நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








