அமேஸ் புண்ணியத்தில் 4ம் இடத்துக்கு முன்னேறிய ஹோண்டா!

மொத்த கார் மார்க்கெட்டும் மந்த கதியில் இருக்கும் நிலையில், அமேஸ் வருகையால் புத்தெழுச்சி கண்டுள்ளது ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை. மாருதி உள்பட பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை கடந்த மாதமும் சரிவு கண்டிருக்கிறது.
ஆனால், ஹோண்டாவின் விற்பனை கடந்த மாதம் கணிசமாக அதிகரித்தது. கடந்த மாதம் மொத்தம் 11,342 கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், விற்பனை 9.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், 6,036 அமேஸ் கார்களும் அடங்கும். இது ஹோண்டாவின் மொத்த விற்பனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கையை அமேஸ் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்," இந்திய மார்க்கெட்டில் மீண்டும் முக்கிய இடத்துக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த மாதம் வலுவான விற்பனை பதிவை எட்டியிருப்பது தற்காலிகமானதாக கருதவில்லை. வரும் காலங்களிலும் தொடர்ந்து வலுவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வோம் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








