2012ல் விற்பனையில் உலகின் நம்பர்-1 எஸ்யூவி ஹோண்டா சிஆர்வி!
கடந்த ஆண்டு எஸ்யூவி மார்க்கெட்டில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது ஹோண்டா சிஆர்வி. கடந்த ஆண்டு மட்டும் 6,35,256 சிஆர்வி எஸ்யூவி கார்களை ஹோண்டா உலக அளவில் விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்து, ஹூண்டாய் ஐஎக்ஸ்-35 எஸ்யூவி விற்பனையில் இரண்டாம் இடத்தையும், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
அதேவேளை, இந்தியாவில் மிகக்குறைந்த பங்களிப்பை மட்டுமே ஹோண்டா சிஆர்வி வழங்கியுள்ளது. அதிக விலை, டீசல் மாடல் இல்லாதது உள்ளிட்டவை ஹோண்டா சிஆர்விக்கு நம் நாட்டு மார்க்கெட்டில் பெரிய இடம் கிடைக்கவில்லை. அதேவேளை, இந்தியாவில் ஒருவேளை டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கினால் நிச்சயம் பெரிய அளவில் வெற்றி பெறும். ஸ்லைடரில் விற்பனையில் உலகின் டாப்-10 எஸ்யூவி மாடல்களை காணலாம்.

ஹோண்டா சிஆர்வி
கடந்த ஆண்டு 6,35,256 சிஆர்வி கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஹூண்டாய் ஐஎக்ஸ்35
கடந்த ஆண்டு 494453 ஹூண்டாய் ஐஎக்ஸ்35 எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
கடந்த ஆண்டு 4,29,013 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளது.

டொயோட்டா ரேவ்4
கடந்த ஆண்டு 4,28,514 டொயோட்டா ரேவ்4 எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளது. பட்டியலில் 4ம் இடம் கிடைத்துள்ளது.

ஃபோர்டு குகா/ எஸ்கேப்
கடந்த ஆண்டு விற்பனை பட்டியலில் ஃபோர்டு குகா எஸ்யூவிக்கு 5ம் இடம் பெற்றது. கடந்த ஆண்டு 4,03,841 குகா/எஸ்கேப் எஸ்யூவி ரக கார்களை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது.

கியா ஸ்போர்டேஜ்
ஹூண்டாயின் அங்கமாக செயல்படும் கியா நிறுவனம் கடந்த ஆண்டு 3,87,142 ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 6ம் இடத்தை பெற்றுள்ளது.

நிசான் குவாஷ்கெய்
கடந்த ஆண்டு 2,98,166 குவாஷ்கெய் எஸ்யூவி கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது. உலக அளவில் விற்பனை பட்டியலில் 7ம் இடம் பிடித்துள்ளது.

டேஸியா/ரெனோ டஸ்ட்டர்
கடந்த ஆண்டு 2,95,096 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை டேஸியா மற்றும் ரெனோ நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன. பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது டஸ்ட்டர்.

செவர்லே இகியூனாக்ஸ்
கடந்த ஆண்டில் 2,93,152 செவர்லே இகியூனாக்ஸ் எஸ்யூவி கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. பட்டியலில் 9ம் இடம் கிடைத்துள்ளது.

ஹூண்டாய் சான்டா பீ
டாப்-10 பட்டியலில் ஹூண்டாய் சான்டா பீக்கு 10வது இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு 2,37,562 சான்டா பீ கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








