அமேஸ் கார் உற்பத்தியை அதிகரிக்கும் ஹோண்டா

விற்பனைக்கு வந்து 4 மாதங்களை நெருங்கும் நிலையிலும், அமேஸ் காருக்கான முன்பதிவு தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
எனவே, 5 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. இதனால், புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் கவனத்தை பிற கார்கள் மீது திருப்பும் நிலை இருக்கிறது.
இதனை தவிர்ப்பதற்காக, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில், மூன்றாவது ஷிப்டிலும் அமேஸ் காரை உற்பத்தி செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது. மாதத்திற்கு சராசரியாக 5,500 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








