தாய்லாந்தில் கூடுதல் அம்சங்களுடன் ஹோண்டா பிரியோ அறிமுகம்
அதிவேகத்தில் வளர்ந்து வரும் தாய்லாந்து கார் மார்க்கெட்டில் கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஹோண்டா பிரியோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரியோ அறிமுகம் செய்யப்பட்டு முதன்முறையாக தாய்லாந்து மாடலில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இந்த மாற்றங்களுடன் கூடிய ஹோண்டா பிரியோ அடுத்த வரும் மாதங்களில் அறிமுக வாய்ப்பு இருக்கிறது. புதிய பிரியோ பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பனி விளக்கு
தாய்லாந்து மார்க்கெட்டில் தற்போது பனி விளக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, முகப்பில் மாற்றங்கள் இல்லை.

பின்புறத்தில் மாற்றங்கள்
பின்புறத்தில் வாஷ் வைப்பர் பொருத்தப்பட்டு உள்ளது. பின்புற வைன்ட்ஷீல்டுக்கு கீழே சில்வர் பட்டை ஒன்றும் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் கவர்ச்சியை தருகிறது. புதிதாக ரியர் ஸ்பாய்லரும், அதில் எல்இடி ஸ்டாப் லைட்டும் கொண்டுள்ளது.

டச்ஸ்கிரீன் சிஸ்டம்
டாப் வேரியண்ட்டில் நேவிகேஷனை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய வேரியண்ட்
புதிதாக வி என்ற ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய வண்ணங்கள்
ராலி ரெட் மற்றும் மாடர்ன் ஸ்டீல் கிரே ஆகிய 2 புதிய வண்ணங்களில் அங்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








