அடுத்த ஆண்டு அக்கார்டு ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
அடுத்த ஆண்டு ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட அக்கார்டு காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
விற்பனையில் படு மோசமாக இருந்து வந்த அக்கார்டு பிரிமியம் செடான் காரின் விற்பனையை நிறுத்துவதாக சமீபத்தில் ஹோண்டா அறிவித்தது.

புதிய அக்கார்டு காரின் வருகை எந்தவொரு தகவலையும் அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட அக்கார்டு மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் ஹைபிரிட் கேம்ரி காரை இந்தியாவில் விற்பனைக்கு விட்டுள்ளது. இதன் போட்டியாளராக ஹைபிரிட் அக்கார்டு காரை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
வட அமெரிக்கா உள்பட சில குறிப்பிட்ட மார்க்கெட்டுகளில் ஹைபிரிட் அக்கார்டு காரை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








