திங்கட்கிழமை புதிய 150சிசி பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
வரும் திங்கட்கிழமை புதிய 150சிசி பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
ஹோண்டாவின் சிபிஆர் வரிசை பைக்குகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

நம் நாட்டு மார்க்கெட்டில் சிபிஆர் வரிசையில் சிபிஆர் 250ஆர் மற்றும் சிபிஆர் 150ஆர் ஆகிய பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், சிபிஆர் 150ஆர் பைக்கின் ஸ்ட்ரீட் வெர்ஷனை கடந்த ஆண்டு நவம்பரில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா மோட்டார் ஷோவில் ஹோண்டா அறிமுகம் செய்தது.
இந்த புதிய பைக்கை வரும் திங்கட்கிழமை முதல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா. ஹோண்டா ஸ்டீரிட் ஃபயர் சிபிஆர் 150ஆர் பைக்கில் 17.6 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 149.4சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதுதான் இந்திய மார்க்கெட்டில் அதிக பவர்ஃபுல்லான 150சிசி ஸ்டீரிட் பைக்காக இருக்கும். ரூ.90,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








