மொபிலியோ தவிர்த்து மற்றுமொரு எம்பிவி காரை களமிறக்கும் ஹோண்டா!
மொபிலியோ தவிர்த்து இன்னொரு புதிய எம்பிவி காரை இந்திய சந்தையில் களமிறக்குவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய எம்பிவி கார் டொயோட்டா இன்னோவாவுக்கு நேரடி போட்டியாக இருக்கும். அது என்ன மாடலாக இருக்கும், அதன் சிறப்புகள் என்ன? போன்ற சிறப்பு தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபுல் சைஸ் எம்பிவி
அடுத்த ஆண்டு மொபிலியோ எம்பிவி வருகிறது. இது காம்பெக்ட் ரகம். இது மாருதி எர்டிகாவுக்கு போட்டியாளர். இதைத்தொடர்ந்து, அடுத்து ஒரு ஃபுல் சைஸ் எம்பிவி காரை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

அது இதுதான்
சர்வதேச மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃப்ரீடு எம்பிவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. அதேவேளை, இத்தகவலை ஹோண்டா மறுத்துள்ள போதும், எம்பிவி மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இன்னோவா மீது கண்
கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இன்னோவா விற்பனையில் சாதித்து வருகிறது. இதுவரை 4.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவரை இன்னோவாவுக்கு நேரடி போட்டியாக ஒரு மாடல் இல்லை. எனவே, இந்த செக்மென்ட்டில் ஃப்ரீடு எம்பிவியை இறக்கினால் சரியாக இருக்கும் என்று ஹோண்டா நம்புகிறது.

புதிய மாடல்
புதிய ஃப்ரீடு காரை ஹோண்டாவும், புதிய இன்னோவா மாடலை டொயோட்டாவும் உருவாக்கி வருகின்றன. அந்த புதிய தலைமுறை மாடல்கள்தான் இந்தியாவில் நேருக்கு நேராக களமிறங்க உள்ளன.

விலை
இன்னோவாவைவிட குறைவான விலையில் புதிய ஃப்ரீடு எம்பிவியை களமிறக்கி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பது ஹோண்டாவின் எண்ணம். அதனை ஃப்ரீடு நிறைவேற்றுமா என்பதை பார்க்க 2016 வரை பொறுத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








