இந்தியாவுக்கு வெஸல் இல்லை... புதிய எஸ்யூவியை களமிறக்க ஹோண்டா திட்டம்

By Saravana

இந்தியாவில் வெஸல் எஸ்யூவியை களமிறக்கும் திட்டம் ஹோண்டாவிடம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதற்கு பதிலாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டாவின் வெஸல் எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறின.

Honda SUV

இந்த நிலையில், பண மாற்று மதிப்பில் இருக்கும் சிக்கல்களால் வெஸல் எஸ்யூவியை இந்தியாவில் தருவிக்க இயலாத நிலையில் ஹோண்டா இருக்கிறது.

வெஸல் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்தால் ரூ.16 லட்சம் விலை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இது போட்டியாளர்களான டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 500 ஆகியவற்றைவிட அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும்.

எனவேஸ இந்த திட்டத்தை கைவிட்டு புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எஸ்யூவி பிரியோ ஹேட்ச்பேக் கார் அடிப்படையிலானதாக இருக்கும். அமேஸ், மொபிலியோ எம்பிவி கார் மாடல்கள் பிரியோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது போன்றே இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியும் பிரியோ அடிப்படையில் உருவாக்கப்படும்.

வரும் 2016ம் ஆண்டில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2013, 15:53 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+