டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜாஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பரில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அங்கு ஹைபிரிட் மாடல் ஜாஸ் காருக்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த புதிய காரை விரைவில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே கையோடு விற்பனைக்கும் அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

சூப்பர் டிசைன்
மிகக் கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் பல இந்திய வாடிக்கையாளர்களை காத்திருக்கச் செய்துள்ளது.

டீசல் மாடல்
அடுத்து புதிய ஜாஸ் கார் டீசல் மாடலிலும் வருவது ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதிக மைலேஜ் தரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ஜாஸ் கார் வர இருக்கிறது.

இடவசதி
மார்க்கெட்டில் இருக்கும் பல ஹேட்ச்பேக் கார்கள் இடவசதியில் சொதப்பலாக இருக்கின்றன. ஆனால், புதிய ஜாஸ் கார் இடவசதியில் மிக சிறப்பாக இருக்கும் என்பதும் வாடிக்கையாளர்களின் காத்திருப்புக்கு காரணமாகியுள்ளது.

பிரிமியம்
வசதிகள், இன்டிரியர் என அனைத்திலும் போட்டியாளர்களை விட பல படிகள் சிறப்பாக இருக்கும். புதிய சஸ்பென்ஷன் அமைப்பு புதிய ஜாஸ் காரில் மிக சொகுசான பயணத்தை வழங்கும் என ஹோண்டா கூறுகிறது.

சிறப்புகள் ஏராளம்
டிசைன், அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின், சொகுசு, வசதிகள் என அனைத்திலும் சிறப்பான காராக இருக்கும் என்பதோடு, போட்டியாளர்களை சமாளிக்கும் விலையில் புதிய ஜாஸ் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

மொபிலியோ தரிசனம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா அரங்கை அலங்கரிக்கப் போகும் கார்களில் புதிய ஜாஸ் காருடன் சேர்ந்து புதிய மொபிலியோ எம்பிவியும் இடம்பெற உள்ளது. எனவே, ஹோண்டா அரங்கு பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவரும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








