பவர் விண்டோஸில் கோளாறு: சிட்டி கார்களுக்கு ஹோண்டா ரீகால்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பவர் விண்டோஸ் சுவிட்சை மாற்றித் தருவதற்காக இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இதே பிரச்னைக்காக உலக அளவில் 1.43 லட்சம் ஜாஸ் கார்களையும் ஹோண்டா திரும்ப பெற உள்ளது.

மழை நீர் போன்றவற்றால் பவர் விண்டோஸ் சுவிட்ச் எளிதாக பழுதடையும் வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி பழுதடைந்த பவர் விண்டோஸ் சுவிட்ச்சை இயக்கும்போது அதிக சூடாகி கேபினில் தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Honda City

இதையடுத்து, உலக அளவில் ஜாஸ் கார்களையும், இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார்களும் திரும்ப பெறப்பட உள்ளன. கடந்த 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ஜாஸ் மற்றும் இரண்டாம் தலைமுறை சிட்டி கார்கள் திரும்பப் பெறப்பட இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டுதான் ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதால், அந்த காருக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு விடுக்கப்படவில்லை. இந்த பிரச்னையால் விபத்து ஏதும் நிகழ விட்டாலும், வாடிக்கையாளர் நலன் கருதி திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Honda has recalled 42,672 units of second generation Honda City due to power window switch problem.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X