புதிய ஹோண்டா எம்பிவி காரின் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச் வெளியீடு
ஹோண்டா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எம்பிவி காரின் ஸ்கெட்ச் வெளியிடப்பட்டுள்ளது. பிரியோ அடிப்படையிலான இந்த காரை இந்தோனேஷியாவிலுள்ள ஹோண்டா வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் வடிவமைத்து வருகிறது.
வரும் செப்டம்பர் 19 முதல் 29 வரை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ ஷோவில் இந்த புதிய எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஜகார்த்தாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த புதிய எம்பிவி காரின் ஸ்கெட்ச்சை ஹோண்டா வெளியிட்டிருக்கிறது.

பிரியோதான்
முன்பக்க டிசைன், பக்கவாட்டு பாடி லைன்கள் உள்ளிட்டவை பிரியோவை ஒத்திருக்கிறது. பாடி லைன்கள் சற்று இழுத்துவிடப்பட்டு எம்பிவி காராக நீட்டப்பட்டுள்ளது. அதாவது, அமேஸ் காரைப் போன்றே பாடி லைன்கள் இழுத்துவிடப்பட்டுள்ளன.

இருக்கை
இந்த கார் மூன்று வரிசை இருக்கைகள் கொண்டதாகவும், 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்
புதிய எம்பிவி கார் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், புதிய டிசைன், அதிக இடவசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

அதென்ன எல்எம்பிவி கார்
இந்த கார் low hanging roof MPV காராக குறிப்பிட்டு, இதனை எல்எம்பிவி என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

உற்பத்தி
இந்தோனேஷிய மார்க்கெட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் முதல் ஹோண்டா கார் இது. மேலும், கரவாங் என்ற இடத்தில் அமைக்கப்படும் வரும் புதிய கார் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆலை செயல்பட துவங்க உள்ளது.

எஞ்சின்
அமேஸ் போன்றே 100 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லி டீசல் எஞ்சினுடன், புதிய தலைமுறை பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








