இந்தியாவில் அக்குரா சொகுசு கார்களை களமிறக்க ஹோண்டா திட்டம்!

By Saravana

இந்தியாவில் சொகுசு கார்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. டொயோட்டாவுக்கு லெக்சஸ், நிசானுக்கு இன்ஃபினிட்டி போன்று ஹோண்டா கார் நிறுவனம் சொகுசு கார்களை அக்குரா பிராண்டில் சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது.

வட அமெரிக்கா மற்றும் சீன மார்க்கெட்டில் அக்குரா கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பந்தயங்களிலும் அக்குரா பிராண்டு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், "இந்திய சொகுசு மார்க்கெட் முதிர்ச்சியடையும்போது அக்குரா சொகுசு கார்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஹோண்டா கார் இந்தியா நிறுவனத் தலைவர் ஹிரோனோரி கனயாமா தெரிவித்துள்ளார்.

முதிர்ச்சியான மார்க்கெட்

முதிர்ச்சியான மார்க்கெட்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி கார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வர்த்தக கொள்கைகளை ஹோண்டா, டொயோட்டா, நிசான் ஆகிய 3 ஜப்பானிய நிறுவனங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றன. ஜெர்மன் நிறுவனங்களின் விற்பனை ஒரு கட்டத்தை எட்டி மார்க்கெட் முதிர்ச்சியான நிலையை எட்டும்போது தங்களது சொகுசு பிராண்டுகளை களமிறக்க இந்த 3 நிறுவனங்களுமே தருணம் பார்த்து காத்திருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே ஹோண்டா இந்தியா கார் நிறுவனத் தலைவரின் கூற்று பார்க்கப்படுகிறது.

இறக்குமதி புண்ணியமில்லை

இறக்குமதி புண்ணியமில்லை

ஜப்பானிய கார் நிறுவனங்கள் சொகுசு கார்களை களமிறக்க தயக்கம் காட்டுவதற்கு, இறக்குமதி செய்து கார்களை விற்பனை செய்தால் போட்டியாளர்களைவிட குறைந்த விலையில் கார்களை நிலைநிறுத்துவது அவசியம். ஆனால், இறக்குமதி செய்து விற்பனை செய்யும்போது விலை அதிகரிக்கும். இந்தியாவிலேயே சொகுசு கார்களை விற்பனை செய்ய வேண்டுமெனில் அதிக தேவை இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, இந்த விஷயத்தில் அவசரப்பட்டு கையை சுட்டுக் கொள்ள ஜப்பானிய நிறுவனங்கள் தயாராக இல்லை.

சாத்தியம்

சாத்தியம்

பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்து வரும் ஜெர்மன் நிறுவனங்களுக்கு இந்திய மார்க்கெட் சவாலாக இருந்து வருகிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் இந்திய மார்க்கெட் சொகுசு கார்களுக்கான வரவேற்பு நிச்சயம் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவை வர்த்தகத்தையும், முலீட்டையும் அதிகரித்து வருகின்றன. எனவே, ஜெர்மன் நிறுவனங்களின் வர்த்தகம் ஸ்திரத்தன்மையை பெற்றவுடன் தங்களது சொகுசு கார்களை இறக்க ஹோண்டா உள்பட ஜப்பானிய நிறுவனங்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன.

அக்குரா கார்கள்

அக்குரா கார்கள்

ஐஎல்எக்ஸ், டிஎஸ்எக்ஸ், டிஎல், ஆர்எல்எக்ஸ் உள்ளிட்ட செடான் கார்களையும், ஆர்டிஎக்ஸ்,எம்டிஎக்ஸ், இசட்டிஎக்ஸ் எஸ்யூவி மாடல்களை அக்குரா பிராண்டில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2013, 12:22 [IST]
English summary
The notion that Honda is open to the idea of introducing the Acura brand in India has arrived from a recent comment given by Honda Cars India president, Hironori Kanayama, to Autocar. In his statement Kanayama stated that the company will consider bringing Acura here once the market matures, but until that point their priority is not towards luxury cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+