2 மாதங்களில் 16,000 ஹோண்டா அமேஸ் கார்கள் விற்பனை
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 16,000 ஹோண்டா அமேஸ் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹோண்டா அறிமுகம் செய்த அமேஸ் செடான் கார் எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை. அதுவும் முதல் டீசல் கார் என்பதால் ஆரம்பம் முதலே இந்த கார் மீது அதிக ஆவல் இருந்து வந்தது.

இதனால், கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மொத்தம் 16,000 அமேஸ் கார்களை ஹோம்டா டெலிவிரி கொடுத்துவிட்டது.
இதில், 13,000 கார்கள் டீசல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அமேஸ் காருக்கான முன்பதிவு விறுவிறுப்பாகவே இருந்து வருகிறது. இதனால், ஹோண்டா புதுத்தெம்புடன் அடுத்ததாக புதிய எம்பிவி உள்ளிட்ட கார் மாடல்களை களமிறக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








