அடுத்த மாதம் புத்தம் புதிய ஹோண்டா சிட்டி: டீசலிலும் வருகிறதாம்!

அடுத்த மாதம் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அசத்தலான புத்தம் புதிய டிசைனில் வருவதோடு, டீசல் மாடலிலும் வர இருப்பதாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹோண்டாவின் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வந்த சிட்டி இன்றளவும் மிட்சைஸ் பெட்ரோல் கார்களை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஆனால், டிசைன் மற்றும் பல எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஹூண்டாய் வெர்னா காருக்கு முன்னால் சிட்டியின் சாதகங்கள் தோற்றுப்போய்விட்டன. இந்த நிலையில், வெர்னாவை விட படு அசத்தலான டிசைனில் புதிய சிட்டி கார் டீசல் மாடலிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

விற்பனை நிறுத்தம்

விற்பனை நிறுத்தம்

சிட்டியின் பல வேரியண்ட்டுகளின் விற்பனையை ஹோண்டா தற்போது நிறுத்திவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவே, புதிய சிட்டி வருகையை உறுதிப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

குறிப்பு: அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஹோண்டா கிரைடர் செடான் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 டிசைன்

டிசைன்

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிரைடர் செடான் காரிலிருந்து ஏராளமான டிசைன் தாத்பரியங்கள் நான்காம் தலைமுறையாக வரும் புதிய சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தோற்றத்தில் ஹூண்டாயின் புளூயிடிக் வெர்னாவைவிட சூப்பராக இருக்கும் என்று தெரிகிறது.

கொஞ்சம் பெருசு

கொஞ்சம் பெருசு

தற்போதைய சிட்டி காரை விட புதிய சிட்டி மாடல் வடிவத்தில் பெரிதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

டீசல் மாடல்

டீசல் மாடல்

விற்பனையில் முன்னிலை வகித்து வந்த சிட்டி கார் பின்தங்கியதற்கு டீசல் மாடல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, புதிய சிட்டி காரில் டீசல் மாடலுடன் விற்பனைக்கு இறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளதாம்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

அமேஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் எஞ்சினை அதிக பவர் தரும் வகையில் ட்யூனிங் செய்து பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிய டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்ய திட்டம் இருப்பதாக ஏற்கனவே ஹோண்டா கூறியிருந்தது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அதிக குரோமிய வேலைப்பாடுகள் மற்றும் பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஆகியவற்றுடன் வருகிறது. தவிர, புதிய சிட்டி காரில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் இதர வசதிகள் ஏராளமாக இருக்கும் என்றும் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் புதிய ஹோண்டா சிட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து ஹோண்டா இதுவரை எந்த உறுதியையும் அளிக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2013, 11:25 [IST]
English summary
Japanese car maker Honda will unveil the fourth-generation of the City sedan by next month, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+