எதிர்பார்த்ததைவிட ரொம்பவே அசத்தலான புதிய ஹோண்டா எஸ்யூவி!
மிக சிறப்பாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் இன்று முறைப்படி டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.
இதனிடையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய எஸ்யூவி இந்தியர்களுக்கு தரிசனம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையிலான இந்த புதிய எஸ்யூவி பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ படங்கள் இதோ உங்களுக்காக ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

பெயர்
ஜப்பானில் வெஸல் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. ஆசிய, ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் இதே பெயரில் வருமா அல்லது வேறு பெயரில் வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

பாடி டிசைன்
இந்த எஸ்யூவியின் மேல்பாதி கூபே டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பிற எஸ்யூவி மாடல்களிலிருந்து எளிதாக வித்தியாசப்படும்.

இன்டிரியர்
வழக்கம்போல் ஹோண்டா நிறுவனத்தின் தரமும், அலங்காரமும் இந்த புதிய எஸ்யூவியிலும் நிறைந்திருக்கிறது.

வசதி
முன்புற இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன், மிக சொகுசானதாக இ ருக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. பின்புற பயணிகளுக்கும் சவுகரியமாக இருக்கும் என்கிறது ஹோண்டா.

ஹைபிரிட் மாடல்
இன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஹைபிரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கிறது.

டீசல் மாடல்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடனும் அறிமுகம் செய்யப்படும். இந்த எஸ்யூவியில் புதிய டிரான்ஸ்மிஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

எரிபொருள் சிக்கனம்
புதிய தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட டிரான்ஸ்மிஷன் அமைப்பு மற்றும் எஞ்சின் கொண்ட இந்த புதிய எஸ்யூவி அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை தேதி
அடுத்த மாதம் 20ந் தேதி இந்த புதிய எஸ்யூவி பற்றிய முழுமையான விபரங்களை வெளியிடுவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. அன்றைய தினமே ஜப்பான் மார்க்கெட்டில் விற்பனைக்கும் வருகிறது.


Click it and Unblock the Notifications








