ஹோண்டாவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் காப்புரிமை படங்கள்

ஒவ்வொரு தயாரிப்பாளரும் காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில், ஹோண்டா மட்டும் விதிவிலக்கா என்ன? ஆம், வரும் 20ந் தேதி டோக்கியோ மோட்டார் ஷோவில் புதிய எஸ்யூவியை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் அர்பன் கான்செப்ட் என்ற அந்த எஸ்யூவி மாடலின் மாதிரி படங்களை ஒரு இணைய தளம் வெளியிட்டுள்ளது. அந்த படங்களில் ஹோண்டாவின் கான்செப்ட் நிலை எஸ்யூவி தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருப்பது உறுதியாகியுள்ளது.

Honda Compact SUV

சிஆர் வி எஸ்யூவியின் மினியேச்சர் போன்று இருக்கும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி போட்டியாளர்களைவிட சிறந்த டிசைன் மற்றும் தரத்தை கொண்டதாக இருக்கும் என நம்பலாம். முகப்பு கிரில் ஹோண்டாவின் புதிய எச் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மார்க்கெட்டுகளிலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளதால், டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த எஸ்யூவி பேராவலை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
When virtually every manufacturer is introducing compact SUVs all across the the world Honda could not be left far behind. In fact, the Japanese automaker did reveal a small concept vehicle, the Urban SUV at the Detroit Motor Show early this year. The same vehicle, either in concept or production form will be revealed at the Tokyo Motor Show on November 20.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X