ஹாங்காங்கில் புதிய சரித்திரத்தை துவங்கும் எலக்ட்ரிக் பஸ்
ஹாங்காங்கை சேர்ந்த சிஎல்பி மின் உற்பத்தி நிறுவனம் தனது பணியாளர்களின் போக்குவரத்துக்காக புதிய எலக்ட்ரிக் பஸ்சை வாங்கியிருக்கிறது. ஹாங்காங் நகரில் வலம் வரப் போகும் முதல் எலக்ட்ரிக் பஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட இந்த பஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும், பிற நிறுவனங்களுக்கும் இந்த பஸ்சை சோதனை செய்து கொள்ள அனுமதிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

குயிக் சார்ஜ்
முழு சார்ஜ் செய்வதற்கு வெறும் மூன்று மணி நேரம் போதுமாம்.

300 கிமீ செல்லும்...
ஆனால், ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏசி இயங்கினாலும் 300 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு பயணம்
சப்தம் மற்றும் வெப்பlத்தை அதிகம் வெளிப்படுத்தாமல் செல்லும் என்பதால் மிக சொகுசான பயண அனுபவத்தை தருமாம்.

எரிபொருள் சிக்கனம்
தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்சினில் இயங்கும் பஸ்களை ஒப்பிடும்போது இதற்கு 27 சதவீத எரிபொருள் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி பஸ்
அடுத்த சில ஆண்டுகளில் ஹாங்காங் நகரில் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையிலும் இந்த பஸ் ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

விலை
டீசல் பஸ்களைவிட இருமடங்கு விலையில் இந்த பஸ் வாங்கப்பட்டுள்ளதாக சிஎல்பி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பஸ் மிக குறைந்த எரிபொருள் செலவை கொண்டிருப்பதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொகை சமன் செய்யப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் மயம்
சிஎல்பி பவர் நிறுவனம் மட்டுமல்ல, அங்குள்ள பல நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. பிஒய்டி என்ற டாக்ஸி நிறுவனம்கூட பேட்டரியில் இயங்கும் 45 கார்களை வாங்கியிருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் முழுவதும் எலக்ட்ரிக் கார்களை இயக்கவும் முடிவு செய்துள்ளது.
Image source: CLP Group


Click it and Unblock the Notifications








