ஹூண்டாய் கார் வாங்க இதுவே சரியான தருணம்: ரூ.1.45 லட்சம் வரை சேமிப்பு
கார் மார்க்கெட்டின் தட்பவெப்ப நிலை தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தத்தளித்து நிற்கின்றன. வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து விற்பனையை அதிகரிக்கும் விதமாக தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் தற்போது சுதந்திர தினத்தையொட்டி தனது அனைத்து கார் மாடல்களுக்கும் சேமிப்பு சலுகைகளை வழங்குகிறது. பெட்ரோல் மட்டுமின்றி சில டீசல் மாடல்களுக்கும் சலுகைகளை வழங்குகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.21,000 முதல் ரூ.1.45 லட்சம் வரை சலுகைகளை பெறலாம்.

இயான்
இயான் காருக்கு ரூ.21,250 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

சான்ட்ரோ
சான்ட்ரோ காருக்கு ரூ.29,350 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

ஐ10
ஹூண்டாய் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.38,000 வரையிலான சலுகைகளை பெற முடியும்.

ஐ20
பெட்ரோல் மாடலுக்கு ரூ.28,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.35,000 வரையில் சேமிப்பை பெற முடியும்.

ஆக்ஸென்ட்
உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், இருப்பில் இருக்கும் ஆக்ஸென்ட்டுக்கு ரூ.30,700 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

வெர்னா
புளூயிடிக் வெர்னாவின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.25,000 மதிப்புடைய சேமிப்பையும், டீசல் மாடலுக்கு ரூ.35,000 மதிப்புடைய சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

எலன்ட்ரா
புளூயிடிக் எலன்ட்ரா டீசல் மாடலுக்கு ரூ.65,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

சொனாட்டா
சொனாட்டா பிரிமியம் செடான் காருக்கு ரூ.1.39 லட்சம் வரையிலான சேமிப்பை பெற முடியும்.

சான்டா ஃபீ
சான்டா ஃபீ பிரிமியம் எஸ்யூவியை முன்பதிவு செய்வோர் ரூ.1.45 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ஹூண்டாய் டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








