இங்கிலாந்திலிருந்து தரைவழியாக இந்தியா வரும் ரேஞ்ச்ரோவர் கார்கள்!
டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் மற்றும் ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார்களின் சிறப்பியல்களை எடுத்தியம்பும் வகையில், இங்கிலாந்திலுள்ள ஆலையில் இருந்து தரைவழியாக 2 ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களையும் மும்பையிலுள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகத்துக்கு வரப்பட உள்ளது.
பல்வேறு நாடுகளை கடந்து இந்தியா வரும் இந்த ஹைபிரிட் எஸ்யூவி கார்கள் அக்டோபர் மாதம் மும்பையிலுள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகத்தை வந்தடையும்.

நெடும் பயணம்
இங்கிலாந்திலுள்ள ஆலையிலிருந்து பிரான்ஸ், போலந்து, ரஷ்யா மற்றும் சீனா வழியாக இந்த கார்கள் தரை மார்க்கமாக இந்தியா வருகின்றன. பிரான்ஸிலிருந்து இந்தியாவை இணைக்கும் சரித்திரம் முக்கியத்துவம் பெற்ற 'சில்க்' வழித்தடத்தில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இது கடும் சவால்கள் நிறைந்த சாலைகள் வழியாக கடந்து வருகிறது.

எஞ்சின்
இரண்டு கார் மாடல்களிலும் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோன்று, இரண்டிலும் 35 kW திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் இருக்கும். மொத்தமாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும்போது அதிகபட்சமாக 335 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தப்படும்.

ஹெவி வெயிட்
2372 கிலோ எடை கொண்ட ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், 2394 கிலோ எடை கொண்ட ரேஞ்ச்ரோவரிலும் 120 கிலோ எடை கொண்ட ஹைபிரிட் யூனிட் பொருத்தப்பட்டிருக்கிறது.

எரிபொருள் சிக்கனம்
இரண்டு கார்களும் ஒரு லிட்டருக்கு மைலேஜ் என்ற கணக்கீட்டின்படி 18.7 கிமீ மைலேஜை தரும் என்பதோடு, ஒரு கிலோமீட்டருக்கு 169 கிராம் கார்பனையும் வெளியிடுவதாக இருக்கும். இது சாதாரண ரேஞ்ச்ரோவர் மாடல்களைவிட 16 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் தருவதாக இருக்கும்.

ஆஃப்ரோடு எஸ்யூவி
இரண்டு கார்களிலும் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். சாதாரண மாடல்கள் போன்றே டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் போன்ற ஆஃப்ரோடில் இயக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர் 7.1 வினாடிகளையும், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் 6.9 வினாடிகளையும் எடுத்துக் கொள்ளும். ரேஞ்ச்ரோவர் மணிக்கு 217 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாகவும், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மணிக்கு 225 கிமீ டாப் ஸ்பீடாகவும் இருக்கும்.

பேட்டரி திறன்
முழுவதுமாக மின் மோட்டாரில் இயங்கும் வசதியும் இருக்கிறது. ஆனால், ஒன்றரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி ஆற்றலில் செல்ல முடியும். தவிரவும், மணிக்கு அதிகபட்சமாக 48 கிமீ வேகத்தில் மின் மோட்டாரில் காரை இயக்க முடியும்.

இந்தியாவுக்கு...?
ஹைபிரிட் ரேஞ்ச்ரோவர்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து ஜேஎல்ஆர் வசமிருந்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இந்த ஹைபிரிட் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








