ஹூண்டாய் ஐ10 கார் விலையில் ரூ.50,000 தள்ளுபடி!

கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை கார் நிறுவனங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. மாருதி உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் தள்ளுபடி சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. ஹூண்டாய் நிறுவனமும் ஐ10 காருக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஐ10 காரின் எரா வேரியண்ட்டுக்கு ரூ.50,000 தள்ளுபடி பெறலாம் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் ஐ10 எரா வேரியண்ட் ரூ.4,09,465 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரூ.50,000 சலுகை வழங்கப்படுவதால், ரூ.3,59,990 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இந்த மாத இறுதி வரை இந்த சலுகையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai i10 Discount Offer

புதிய மைக்ராவை அறிமுகம் செய்த கையோடு மைக்ரா ஆக்டிவ் காரை ரூ.3.50 லட்சம் ஆரம்ப விலையில் நிசான் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. எனவே, வாடிக்கையாளர் கவனம் மைக்ரா ஆக்டிவ் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், இந்த சலுகையை ஹூண்டாய் அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2013, 15:47 [IST]
English summary
Hyundai recently announced Joyful July discounts on i10 Era variant wherein you could get 50,000 off on Era variant of i10. The car priced at ex-showroom of INR 4,09,465 is now available at price of INR 3,59,990 only.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+