கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் சான்ட்ரோ!!

Hyundai Santro
அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1998ல் மார்க்கெட்டுக்கு வந்த ஹூண்டாயின் முதல் காரான சான்ட்ரோ இன்று வரை தனித்தன்மையுடன் விற்பனையில் தாக்குப் பிடித்து வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 4,000 சான்ட்ரோ கார்கள் விற்பனையாகி வருகிறது.

அதன் பின் வந்த கார் மாடல்களுக்கு கூட எளிதாக குட்பை சொல்லிவிட்ட ஹூண்டாய் நிறுவனத்தால் சான்ட்ரோவுக்கு மட்டும் இன்னும் மனமுவந்து விடை கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதத்தில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய சான்ட்ரோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய்.

பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், குரோம் பூச்சுகள், பார்க்கிங் சென்சார், பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டம், தரை விரிப்புகள், ரியர் சன் பிளைன்டு உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களை கூடுதலாக ஸ்பெஷல் எடிசன் சான்ட்ரோவில் சேர்த்துள்ளது ஹூண்டாய்.

15ம் ஆண்டு கொண்டாட்டமாக தெரிவிக்கப்பட்டாலும், அடுத்த மாதம் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய கிராண்ட் ஐ10 காரால் சாதாரண ஐ10 மாடலின் விலையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் சான்ட்ரோவின் விற்பனையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருப்பு இருக்கும் சான்ட்ரோ கார்களை தீர்த்துக் கட்டும் விதமாக ஹூண்டாய் இந்த ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 11, 2013, 15:35 [IST]
English summary
To commemorate 15 years of driving innovation, Hyundai brings you the Santro Xing Celebration Edition with 6 new exciting features. The Celebration Edition Santro Xing will get additional features over the regular version. Stay tuned for latest updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+