சர்ச்சைக்குரிய 'தற்கொலை' விளம்பரம்: ஹூண்டாய் மன்னிப்பு கேட்டது

பைப் ஜாப் என்ற பெயரில் சமீபத்தில் ஹூண்டாய் ஐஎக்ஸ்35 காருக்கு தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்காக ஒருவர் காரின் புகைப்போக்கி குழாயில் கூடுதல் குழாய் ஒன்றை இணைத்து கார் கேபினுக்குள் விட்டு காரை பூட்டிக் கொள்கிறார்.
அந்த குழாயிலிருந்து வெளிவரும் கரும்புகை கார் கேபின் முழுவதும் நிரம்பி மூச்சுத் திணறி தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். ஆனால், சிறிது நேரம் கழித்து அவர் உயிருடன் திரும்பி வந்துவிடுகிறார்.
அதாவது, ஹூண்டாய் ஐஎக்ஸ்35 கார் குறைந்த கார்பன் புகை வெளியிடும் என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த விளம்பரம் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டும் வகையில் இருப்பதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விளம்பர ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், ஆன்லைனில், வெளியான இதன் வீடியோவை அந்த நிறுவனம் ஒன்று செய்ய முடியவில்லை. இதுகுறித்து ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எங்களது விளம்பர ஏஜென்சியான இன்னோசியன் ஈரோப் நிறுவனம் இந்த விளம்பரத்தை தயாரித்தது.
எங்களிடம் அனுமதி பெறாமலேயே அந்த நிறுவனம் வெளியிட்டு விட்டது. இது எங்களது பிராண்டு மதிப்பையும், எங்களுடைய வாடிக்கயாளர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக, ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்," என்று கூறியிருக்கிறது.
சமீபத்தில்தான் ஃபோர்டு நிறுவனம் உலகின் பிரபல நட்சத்திரங்களை கலாய்த்து வம்பில் சிக்கி மன்னிப்பு கோரியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








