ரூ.1.45 லட்சம் வரை கார்களுக்கு சலுகைகளை வழங்கும் ஹூண்டாய்
ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் டிசம்பர் டிலைட் என்ற பெயரிலான இந்த சலுகை திட்டத்தின் மூலம் கிராண்ட் ஐ10 காரை தவிர்த்து அனைத்து கார்களுக்கும் சிறப்பு சலுகைகளை பெற முடியும்.
மேலும், அனைத்து கார்களுக்கும் சிறப்பு எக்சேஞ்ச் திட்டங்களும் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.30,000 முதல் ரூ.1.45 லட்சம் வரையில் சேமிப்பை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு சேமிப்பு கிடைக்கும் ன்பதை ஸ்லைடரில் காணலாம்.

இயான்
இயான் காருக்கு ரூ.43,250 வரையிலான சேமிப்பை பெற முடியும்.

சான்ட்ரோ
சான்ட்ரோ காருக்கு ரூ.56,000 வரையில் சேமிப்பு சலுகைகளை பெற முடியும்.

ஐ10
ஐ10 காருக்கு ரூ.66,000 மதிப்புக்கு சேமிப்பு சலுகைகளை பெறலாம் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஐ20
ஐ20 காரின் டீசல் மாடலுக்கு ரூ.48,500 மதிப்புக்கு சேமிப்பையும், பெட்ரோல் மாடலுக்கு ரூ.38,000 மதிப்புக்கு சேமிப்பு சலுகைகளையும் பெறும் வாய்ப்பை ஹூண்டாய் வழங்குகிறது.

வெர்னா
வெர்னா காரின் டீசல் மாடலுக்கு ரூ.54,000 வரையிலும், பெட்ரோல் மாடலுக்கு ரூ.30,000 மதிப்புக்கு சலுகைகளையும் பெற முடியும்.

எலன்ட்ரா
எலன்ட்ரா காருக்கு ரூ.75,000 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும்.

சொனாட்டா
சொனாட்டா காருக்கு ரூ.1.39 லட்சம் மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

சான்டாஃபீ
சான்டாஃபீ எஸ்யூவிக்கு ரூ.1.45 லட்சம் மதிப்புடைய சலுகைகளை பெறலாம் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

முக்கிய குறிப்பு
இங்கே வழங்கப்பட்டிருக்கும் சலுகை விபரங்கள் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்புள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications








