கிராண்ட் ஐ10 காருக்கு ரகசிய முன்பதிவு - முக்கிய அம்சங்கள்
கிராண்ட் ஐ10 காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கும் கார்களுக்கு டீலர்களில் முன்கூட்டியே முன்பதிவு துவங்குவது வாடிக்கையான நிகழ்வுதான். விலை மற்றும் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கிராண்ட் ஐ10க்கு டீலர்கள் முன்பதிவை துவங்கிவிட்டனராம்.
ரூ..5,000 பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறதாம். ஆனால், ஐ10 பெயரில் முன்பதிவு செய்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கிராண்ட் ஐ10 காருக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் முன்பதிவு நடக்கிறது. கிராண்ட் ஐ10 கார் பற்றிய கூடுதல் விபரங்களும் வெளியாகியுள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்
1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. டீசல் எஞ்சின் 75 பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்தும்.

விலை
ரூ.4.6 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியண்ட்கள்
ஐ10 கார் போன்றே எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா, அஸ்டா ஆப்ஷனல் ஆகிய 5 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

சிறப்பம்சங்கள்
1ஜிபி சேமிப்பு திறன் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், கூல்டு கிளவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள், டிரைவர் சைடு பவர் விண்டோ, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் 14 இஞ்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.

பகல்வேளை ரன்னிங் விளக்குகள்
பிரிமியம் கார்களில் இருப்பதுபோன்ற பகல் நேர ரன்னிங் விளக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

புளூயிடிக் டிசைன்
இந்த கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த ஹூண்டாயின் புளூயிடிக் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








