புக்கிங்கில் அசத்தும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 - காரணங்கள்!!
இந்த மாத துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கிராண்ட் ஐ10 காருக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து 20 நாட்களில் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
இந்த முன்பதிவு எண்ணிக்கை ஹூண்டாய்க்கும், அதன் டீலர்களுக்கும் புதுத்தெம்பை அளித்துள்ளது. மேலும், ஹூண்டாய் டீலர்களில் விசாரணை எண்ணிக்கை 50 விழுக்காடுக்கு மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரிப்பு பலம்
டீலர்களில் இந்த கார் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.10 லட்சம் பேர் இந்த கார் குறித்து விசாரணையை போட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் டிரைவ்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க இதுவரை 70,000 பேர் பதிவு செய்துள்ளனராம். எனவே, டெஸ்ட் டிரைவுக்கு பிறகு பலர் கார் வாங்குவதை உறுதி செய்யும் வாய்ப்புள்ளதால் அடுத்து வாரம் மாதங்களிலும் கிராண்ட் ஐ10 காருக்கான முன்பதிவு நன்றாக இருக்கும் என ஹூண்டாய் கணித்துள்ளது.

டீசல் மாடல்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்கு அதிக அளவில் முன்பதிவும், விசாரணைகளும் வருவதற்கு டீசல் மாடலில் வந்தது முக்கிய காரணமாக கூறலாம். 71 பிஎஸ் பவரையும், 163 என்எம் டார்க்கையும் அளிக்கும் புதிய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வந்துள்ளது பெரிய வரவேற்புக்கு காரணம்.

பெட்ரோல் மாடல்
பெட்ரோல் மாடலில் 83 பிஎஸ் பவரையும், 163 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்
டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவித்துள்ளது. எனவே, நகர்ப்புறம், நெடுஞ்சாலை என சேர்த்து சராசரியாக 20 கிமீ மைலேஜ் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதும் இதன் மீதான ஈர்ப்பு அதிகமிருக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்
தரமான இன்டிரியர் பாகங்களும் கிராண்ட் ஐ10 காருக்கு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கவர்ச்சியை பெறுகிறது.

வசதிகள்
இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கூடுதல் வசதிகளை அளிப்பதும் வரவேற்புக்கு காரணம். கூல்டு கிளவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட், 1 ஜிபி மெமரி கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ரியர் பார்க்கிங் சென்சார், 14 இஞ்ச் அலா் வீல் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்திருக்கிறது. இந்த வசதிகள் மாருதி ஸ்விஃப்ட்டில் கிடையாது.

சென்னை விலை
பெட்ரோல்
எரா: ரூ.4.37 லட்சம்
மேக்னா: ரூ.4.57 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.4.97 லட்சம்
அஸ்ட்டா: ரூ.5.57 லட்சம்

சென்னை விலை
டீசல்
எரா: ரூ.5.33 லட்சம்
மேக்னா: ரூ..5.52 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.5.92 லட்சம்
அஸ்ட்டா: ரூ.6.53 லட்சம்


Click it and Unblock the Notifications








