ரூ.4.29 லட்சத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுகம் - விபரம்
ரூ.4.29 லட்சம் ஆரம்ப விலையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டெல்லியில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பாவில் புதிய ஐ10 காராக விற்பனைக்கு செல்லும் இந்த கார் இந்தியாவில் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
ஹூண்டாயின் முக்கிய மாடலாக கருதப்படும் கிராண்ட் ஐ10 டீசல் மாடலிலும் வந்திருப்பது கூடுதல் பலமாக கூறலாம். மாருதியின் ஸ்விஃப்ட் காருக்கு நெருக்கடியை கொடுக்கக் கூடிய அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

புளூயிடிக் டிசைன்
இயான், வெர்னா மற்றும் எலன்ட்ரா வரிசையில் புளூயிடிக் டிசைன் கொண்ட மாடலாக கிராண்ட் ஐ10 வந்திருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின்
83 பிஎஸ் பவரையும், 163 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டீசல் எஞ்சின்
71 பிஎஸ் பவரையும், 163 என்எம் டார்க்கையும் அளிக்கும் புதிய 1.1 லிட்டர் சிஆர்டிஐ யூரோ- 5 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும் வழங்குவதாக அராய் சான்றளித்துள்ளது.

ஆட்டோமேட்டிக் மாடல்
5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

வசதிகள்
கூல்டு கிளவ் பாக்ஸ், ரியர் ஏசி வென்ட், 1 ஜிபி மெமரி கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ரியர் பார்க்கிங் சென்சார், 14 இஞ்ச் அலா் வீல் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்திருக்கிறது. இந்த வசதிகள் மாருதி ஸ்விஃப்ட்டில் கிடையாது.

பெட்ரோல் வேரியண்ட்டுகள்
(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)
எரா: ரூ.4,29,900
மேக்னா: ரூ.4,49,400
ஸ்போர்ட்ஸ்: ரூ.4,88,800
அஸ்டா: ரூ. 5,47,800

டீசல் வேரியண்ட்டுகள்
(டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)
எரா: ரூ.5,23,700
மேக்னா: ரூ.5,43,200
ஸ்போர்ட்ஸ்: ரூ.582,600
அஸ்டா: ரூ.641,600


Click it and Unblock the Notifications








