ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்... படங்களுடன் விபரங்கள்

ஹூண்டாயின் அசத்தலான புதிய ஹேட்ச்பேக் கார் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிஏ என்ற குறியீட்டுப் பெயரில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்த இந்த காருக்கு கிராண்ட் ஐ10 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஹூண்டாயின் ஐ10 மற்றும் ஐ20 ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையில் இது நிலைநிறுத்தப்படுகிறது. மாருதி ஸ்விப்ட் காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையிலான இந்த புதிய கார் டீசல் மாடலிலும் வருகிறது. கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

தோற்றம்

தோற்றம்

ஹெட்லைட், பனி விளக்குகள், 14 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவை கிராண்ட் ஐ காருக்கு சிப்பான தோற்றத்தை வழங்குகின்றன. பகல் நேர ரன்னிங் விளக்குகளும் தனியாக விற்பனை செய்யபப்படும் என்று தெரிகிறது.

புதிய பிளாட்பார்ம்

புதிய பிளாட்பார்ம்

இந்த கார் புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஐ10 காரைவிட 100 மிமீ நீளமும், அகலமும் கூடுதலாகவும், 70மிமீ வீல் பேஸ் அதிகம் என்பதால் சிறந்த இடவசதியை அளிக்கும்.

புதிய டீசல் எஞ்சின்

புதிய டீசல் எஞ்சின்

ஐ10 காரில் இருக்கும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் புத்தம் புதிய 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ஆனால், எஞ்சின் பற்றிய உறுதியான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

1ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மியூசிக் சிஸ்டம், பின்புற இருக்கைக்கு தனி ஏசி வென்ட்டுகள், குளிர்சாதன வசதி கொண்ட கிளவ் பாக்ஸ், ஸ்டார்ட் ஸ்டாப் வசதியுடன் வருகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஐ10 காரைப் போன்றே இன்டிரியரில் ஒற்றுமை இருந்தாலும், தரமான பிளாஸ்டிக் பாகங்கள், பீஜ் வண்ணத்துடன் கூடிய இரட்டை வண்ண இன்டிரியர், புதிய டிசைன் கொண்ட டேஷ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் வருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ரியர் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.

விலை

விலை

பெட்ரோல் மாடல் ரூ.4.5 லட்சம் முதலும், டீசல் மாடல் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையிலிருந்தும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

அடுத்த மாதம் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2013, 10:45 [IST]
English summary
Everyone knew it was going to be placed in between i10 and i20, but did not expect the same i10 name. But the Grand suffix suits the new model because in general it is a glorified i10. With better space, better materials, sportier styling etc,. Hyundai i10 grand will be launched in September, post its public reveal at Frankfurt Auto Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+