டிசையர் மலிஞ்சிடுச்சி, அமேஸ் ம்ஹூம்... அப்ப உங்களுக்கான புதிய சாய்ஸ்!!

காம்பெக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு உங்களுக்கு தெரியாதது அல்ல. மாருதி டிசையரும், ஹோண்டா அமேஸ் காரும் இந்த செக்மென்ட்டில் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனமும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடானை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சோதனை

சோதனை

சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் தற்போது சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பு: மாதிரிக்காக ஹூண்டாய் எச்பி20 செடான் கார் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வடிவம்

வடிவம்

கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரில் டிக்கியை ஒட்ட வைத்து 4 மீட்டருக்குள் வடிவமைத்துள்ளனர். இந்த செடான் 3,765 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இதேபோன்று, இன்டிரியர் பாகங்கள் மற்றும் வசதிகள் ஆகியவை கிராண்ட் ஐ10 காரை ஒத்திருக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூடுதல் வீல் பேஸ்

கூடுதல் வீல் பேஸ்

கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரை விட இந்த புதிய காம்பெக்ட் செடான் கார் கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், காருக்குள் கூடுதல் இடவசதி கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

ஐ20 காரை விட சற்று கூடுதலான விலையில் வரும். இந்த புதிய செடான் கார் விலையும், ஐ20 காரின் விலையும் மிக நெருக்கமாக அமைவதை தவிர்க்க இயலாது. இதனால், புதிய செடான் காரின் வருகை ஐ20 காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

ஆக்சென்ட் கார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய கார் வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் 6ந் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலோ அல்லது அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி 4ம் தேதி இந்த புதிய காம்பெக்ட் செடான் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2013, 10:20 [IST]
English summary
Hyundai India will launch two new models at the 2014 Indian Auto Expo. The first model will be the updated Santa Fe SUV. Something that we told you about earlier this month. It is the second launch, however, that will make more noise. Debuting at the auto show on Feb 6 will be the much awaited compact sedan model based on the Grand i10 hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+