ஜனவரியிலிருந்து ஹூண்டாய் கார் விலையும் உயர்கிறது!
ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.
அனைத்து கார் மாடல்களின் விலையையும் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரூ.2.89 லட்சம் முதல் ரூ.26.69 லட்சம் வரையிலான கார் மாடல்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது.
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பதே கார் விலை உயர்வுக்கு காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி, நிசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








