ஐ10 டாப் வேரியண்ட்டுகளுக்கு 'கல்தா' கொடுக்கும் ஹூண்டாய்!
கிராண்ட் ஐ10 காருடன் விலையில் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஐ10 காரின் டாப் வேரியண்ட்டுகளுக்கு ஹூண்டாய் கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் ஐ10 காருக்கு மாற்று மாடலாக புதிய கிராண்ட் ஐ10 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் புதிய காராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரு கார்களுக்கும் இடையிலான விலை பட்டியலில் பெரும் வித்தியாசம் இல்லாததல் குழப்பம் நிலவுகிறது.

குழப்பத்துக்கு முடிவு
ஐ10 மற்றும் கிராண்ட் ஐ10 கார்களின் டாப் வேரியண்ட்டுகளுக்கு இடையில் மிகச்சிறிய அளவிலான விலை வித்தியாசம் மட்டுமே உள்ளது.

கிராண்ட் ஐ10 விஞ்சிய ஐ10
இதுதவிர, கிராண்ட் ஐ10 தவிர அனைத்து கார்களின் விலையையும் ஹூண்டாய் உயர்த்தியது. இதன் எதிரொலியால் கிராண்ட் ஐ10 காரைவிட ஐ10 காரின் டாப் வேரியண்ட்டுகள் அதிக விலை கொண்டதாக மாறின. இது பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

டாப் வேரியண்ட்டுகளுக்கு கல்தா
ஐ10 காரின் ஸ்போர்ட்ஸ், அஸ்டா வேரியண்ட்டுகளின் விற்பனையை நிறுத்துவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் குட்பை
ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் மாடலும் விரைவில் விற்பனை நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராண்ட் ஐ10 ஆட்டோமேட்டிக்
ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனை நிறுத்துவதற்கு விலை வித்தியாச குழப்பம் மட்டும் காரணமாக தெரியவில்லை. கிராண்ட் ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் கியர் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தும் விதமாக ஐ10 ஆட்டோமேட்டிக் விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








