ஐ10 பிளாட்பார்மில் புதிய செடான்: ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது

Hyundai i10
ஐ10 பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் புதிய குட்டி செடானை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது.

ஐ20 காரின் அடிப்படையில் புதிய செடான் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் புதிய செடான் குறித்து புதிய தகவல்கள் ஹூண்டாயிடமிருந்து வந்துள்ளது.

ஐ10 காரின் அடிப்படையில் புதிய செடானை வடிவமைப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த கார் 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவாக இருக்கும்.

துருக்கி நாட்டிலுள்ள ஆலையில்தான் புதிய ஐ10 முதலில் தயாரிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு ஹூண்டாய் தலைவர் உமித் கரர்ஸ்லான் தெரிவித்துள்ளார்.

ஐ10 காருக்கும் ஐ20 காருக்கும் இடையிலான விலையில் இந்த புதிய கார் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் டீசல் ஐ10 அறிமுகம் செய்யப்பட்ட பின் இந்த புதிய கார் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ10 காரின் செடான் வெர்ஷன் டீசல் மாடலிலும் வரும் என்பதால் மாருதி டிசையருக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 4, 2013, 14:27 [IST]
English summary
Hyundai is set to join the compact sedan race and no it is not going to launch an i20 based sedan but an i10 based sedan. Hyundai Motors, which competes with Maruti Suzuki in almost all segments, so far does not have a viable competitor to the Swift DZire.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+