ஹூண்டாய் கிராண்ட் ஐ10.. மைலேஜ், எஞ்சின் பவர் விபரங்கள்

By Saravana

அடுத்த வாரம் புத்தம் புதிய ஹூண்டாய் காரான கிராண்ட் ஐ10 மார்க்கெட் பிரவேசமாகிறது. டீசலிலும் வருவதால் எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லை. விற்பனைக்கு வரும் தேதி நெருங்க நெருங்க அந்த கார் பற்றிய தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், டீலர் வட்டாரத்திலிருந்து கசிந்த தகவலின்படி, டீசல் கிராண்ட் ஐ10 கார் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் செல்லும் என்று தெரிவிக்கின்றன. எனவே, கிராண்ட் ஐ10 காருக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஐ10 மற்றும் ஐ20 காருக்கு இடையில் வரும் இந்த புதிய கிராண்ட் ஐ10 காரில் 1.2 லிட்டர் கப்பா2 பெட்ரோல் எஞ்சின் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மாருதி ரிட்ஸ், நிசான் மைக்ரா ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 எச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் அளிக்கும் என்றும், டீசல் மாடல் லிட்டருக்கு 70 எச்பி பவரையும், 156 என்எம் டார்க்கையும் அளிக்கும் என்றும் டீலர் வட்டார தகவல் தெரிவிக்கிறது.

 ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மாடலிலும் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடலின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் தருமாம். டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் என்பதே தற்போதைய பரபரப்பாக இருக்கிறது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்ட்டா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி.. வெற்றி

வெற்றி.. வெற்றி

ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் செவர்லே பீட் காரின் டீசல் மாடல்தான் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக திகழ்கிறது. ஆனால், இடவசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டீசல் பீட் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில், இடவசதி, புதிய தொழில்நுட்ப வசதிகள், ஹூண்டாய் பிராண்டு நம்பிக்கை என பல்வேறு பலத்துடன் கூடுதலாக டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் என்ற வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களுடன் வருகிறது கிராண்ட் ஐ10. எனவே, இந்த காருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2013, 12:16 [IST]
English summary
Launch of Hyundai i10 Grand is set to take place on September 3rd. Meanwhile, the company has not come out with any official details of its own. But since dealers already seem to have received demo models details of the vehicle have started trickling out.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+