அமெரிக்காவில் 19 லட்சம் கார்களை திரும்ப பெறும் ஹூண்டாய்
தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்து தருவதற்காக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 12.77 லட்சம் கார்களை திரும்ப பெற இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 6.23 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மற்றும் கியா கார்களில் எலக்ட்ரானிக் சாதனங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏராளமான கார்களில் பழுது ஏற்பட்டது. இதுதொடர்பான புகார்கள் அதிகரித்து வந்ததால் தற்போது பிரச்னையை சரிசெய்து தருவதற்காக அதிக அளவில் கார்களை திரும்ப பெறும் அறிவிப்பை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. ஸ்லைடரில் ஹூண்டாய் திரும்ப பெற இருக்கும் கார் மாடல்கள் மற்றும் ஆண்டு விபரங்களை காணலாம்.

கியா ரோண்டோ
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

கியா செடோனா
2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள்.

கியா ஆப்டிமா
2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள்.

கியா சொரீன்ட்டோ
2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

கியா சோல்
2010ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

கியா ஸ்போர்டேஜ்
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் சொனாட்டா
2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மாடல்கள்.

ஹூண்டாய் டக்ஸன்
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் வேராக்ரூஸ்
2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் ஆக்சென்ட்
2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் எலன்ட்ரா
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் ஜெனிசிஸ் கூபே
2010ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

ஹூண்டாய் சான்டா பீ
2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

புளூயிடிக் எலன்ட்ரா
2011ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள்.

Click it and Unblock the Notifications