மினி எஸ்யூவி உள்பட 4 புதிய கார்களை களமிறக்கும் ஹூண்டாய்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போ ஷின் ஷியோ தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கும் அனைத்து கார்களுமே வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. மினி எஸ்யூவி, எம்பிவி, காம்பெக்ட் செடான், புதிய ஹேட்ச்பேக் என இந்த பட்டியலில் இடம்பெறப் போகும் கார்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மினி எஸ்யூவி உறுதி
காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் நாங்கள் கொஞ்சம் லேட். இருப்பினும், புதிய மினி எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என போ ஷின் ஷியோ கூறியுள்ளார்.

புதிய எம்பிவி
யுட்டிலிட்டி ரகத்தில் ஹூண்டாயிடம் கார்கள் இல்லை. இந்த குறையை போக்கும் விதத்தில் 2015ம் ஆண்டில் புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. எர்டிகாவை குறிவைத்து இந்த எம்பிவி காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது.

புதிய காம்பெக்ட் செடான்
ஹூண்டாய் ஐ20 கார் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பெக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டிருக்கும் எச்பி20 செடான் காரை அப்படியே இந்தியாவில் சில மாறுதல்களை செய்து ஹூண்டாய் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய கார் விற்பனைக்கு வரும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

புதிய ஹேட்ச்பேக் கார்
ஐ10 காருக்கும், ஐ20 காருக்கும் இடையில் புதிய ஹேட்ச்பேக் காரையும் அறிமுகப்படுத்த உள்ளது. ஐ15 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் தற்போது தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த கார் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருப்பது கூடுதல் விசேஷம். வரும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஏற்றம் பெறுமா?
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளர் என்ற பெயரை தக்கவைத்து வந்தாலும், புதிய மாடல்கள் இல்லாததால் போட்டியை விற்பனையில் எதிர்பார்த்த ஏற்றத்தை பெற முடியாமல் தவிக்கிறது ஹூண்டாய். எனவே, வாடிக்கையாளர்களை கவர்ந்து நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கார்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஹூண்டாய் கார் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








