ஆல்ட்டோ கே10 காருக்கு போட்டியாக 1.0 லி எஞ்சினுடன் வரும் இயான்!!

Hyundai Eon
மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு நேர் போட்டியாக 1.0 லி எஞ்சினுடன் கூடிய இயான் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்ற அசத்தலான புதிய காரின் படங்களை ஹூண்டாய் நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், பட்ஜெட் கார் செக்மென்ட்டில் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரெடுக்கும் முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மேலும், அனைத்து ரகங்களிலும் கார்களை இடைவெளி இல்லாமல் நிரப்ப உள்ளது. இதற்காக, அடுத்த 18 மாதங்களில் பல முக்கிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறது.

1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இயான் கார், புதிய காம்பெக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இதுகுறித்து ஹூண்டாய் உயரதிகாரி சிஎச்.ஹன் கூறுகையில்," அதிக எண்ணிக்கையில் கார் விற்பனை செய்வதைவிட, அனைவரும் விரும்பும் சிறந்த கார் பிராண்டு என்று பெயரெடுப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

வரும் 2017ம் ஆண்டிற்குள் அனைத்து செக்மென்ட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கார் மாடல்களை கையில் வைத்திருக்கும் வகையில் திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது ஹூண்டாய். எனவே, ஹூண்டாயின் யுக்திகள் மாருதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2013, 10:32 [IST]
English summary
South korean car maker Hyundai is planning to launch 3 new car modesls in next 18 months. one of which will be an Eon with a 1.0 liter engine that will challenge the Alto K10.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+