ஆகஸ்ட்டில் அறிமுகமாகிறது புதிய ஹூண்டாய் ஐ10

ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய கார் புதிய பெயரில் வெளிவரும் என தெரிகிறது.
ஐ15 என்ற பெயரில் வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காரில் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.
இதன்மூலம், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் இந்த புதிய கார் பெரும் வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது. மேலும், செவர்லே பீட் காருக்கு இந்த கார் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த புதிய கார் தற்போது தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








