ஹூண்டாய் ஐ10 காரில் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடலை நிறுத்த திட்டம்!!
ஹூண்டாய் ஐ10 காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சினை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் ஐ10 கார் 1.1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் கப்பா என்ற 2 பெட்ரோல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் கிராண்ட் ஐ10 காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வந்துள்ளது.
எனவே, கிராண்ட் ஐ10 காரின் பெட்ரோல் வேரியண்ட்டுக்கும், ஐ10 காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டுக்கும் இடையிலான குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனை தவிர்க்கும் விதமாக ஐ10 காரின் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் மாடலை நிறுத்துவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கிராண்ட் ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டையும் ஹூண்டாய் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








