ஹூண்டாய் ஐ20 செடான் - ஒர்க் அவுட் ஆகுமா?
ஐ20 ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய செடான் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் சில நாட்களுக்கு முன்பு பிரேசில் மார்க்கெட்டில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எச்பி20 என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் கார் அங்கு ரூ.10.95 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து தற்போது ஹூண்டாய் பரிசீலித்து வருகிறது. ஏனெனில், தற்போது அக்ஸென்ட், வெர்னா உள்ளிட்ட கார்களின் விற்பனை போதிய அளவு ஹூண்டாய்க்கு கைகொடுக்கவில்லை.
எனவே, இந்த புதிய செடான் காரை ஹூண்டாய் களமிறக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. புளூயிடிக் டிசைன் கொண்ட இந்த கார் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காராக இருப்பதால் விலை நிர்ணயத்தில் பல சங்கடங்களை ஹூண்டாய் சந்திக்க நேரிடும். இதனால், மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களுடன் போட்டி போட முடியாது என்ற நிலை இருக்கிறது. ஆனால், செவர்லே செயில் செடானுக்கு போட்டியை கொடுக்கும்.

எஞ்சின்
எஞ்சின் பிரேசில் மார்க்கெட்டில் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் கப்பா ஃபிளெக்ஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் காமா எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினை இந்த காரிலும் பயன்படுத்த முடியும்.

பூட்ரூம்
இந்த கார் 450 லிட்டர் பூட்ரூம் கொண்டிருப்பதால் அதிக பொருட்களை வைப்பதற்கான வசதி இருக்கும்.

டிசைன்
4.2 மீட்டர் கொண்ட இந்த கார் 2.5 மீட்டர் வீல் பேஸ் கொண்டிருப்பதால் பயணிகள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.

சுருக்கப்படுமா?
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கு 12 சதவீதம் வரிச் சலுகை கிடைக்கிறது. எனவே, இந்த சலுகை பெறுவதற்காக இந்த காரின் நீளத்தை சுருக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அறிமுகம் எப்போது?
அடுத்த ஆண்டுக்குள் இந்த புதிய கார் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விலை
பிரேசில் மார்க்கெட்டில் ரூ.10.95 லட்சத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய செடான் கார் இந்தியாவில் வெர்னாவைவிட குறைந்த விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ20 செடான்

ஹூண்டாய் ஐ20 செடான்

ஹூண்டாய் ஐ20 செடான்



Click it and Unblock the Notifications








