ஹூண்டாய் மினி எஸ்யூவியின் மாதிரி படங்கள் வெளியானது
இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூண்டாயின் புதிய மினி எஸ்யூவி இப்படித்தான் இருக்கும் என்ற யூக அடிப்படையில் மாதிரி படங்கள் இணைய தளங்களில் வெளியாகியுள்ளன.
ஹூண்டாயின் தாயகமான தென்கொரியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த புதிய எஸ்யூவியின் சோதனை ஓட்டப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில் வெளியாகி இருக்கும் மாதிரி படங்கள் மற்றும் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

மாதிரி படங்கள்
சோதனை ஓட்டப்படங்களில் இருக்கும் டிசைனை அடிப்படையாகக் கொண்டு பிரேசிலை சேர்ந்த ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று புதிய மினி எஸ்யூவியின் மாதிரி படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், ஹூண்டாய் டிசைன் மையத்தை சேர்ந்த எஞ்சினியர் கொடுத்த சில தகவல்களையும் பெற்று இந்த படங்களை உருவாக்கியிருக்கிறது.

புளூயிடிக் டிசைன்
புதிய எஸ்யூவியும் புளூயிடிக் டிசைன் தத்துவத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுகோண வடிவ முகப்பு கிரில் ஹூண்டாய் கார்தான் என்பதற்கா அடையாளச் சான்றாக இருக்கிறது. ஹெட்லைட்டுகள் ஹூண்டாய் ஐ20 காரை நினைவூட்டுகிறது.

கிராஸ்ஓவர் கார்
இந்த காரை கிராஸ்ஓவர் ரகத்தில் ஹூண்டாய் வடிவமைத்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில், இந்த மினி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.

போட்டியாளர்கள்?
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டருக்கு போட்டியாக வரும் இந்த புதிய கிராஸ்ஓவர் ரக காம்பெக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








