முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி
இந்திய மார்க்கெட்டில் மினி எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகமிருக்கிறது. இதனை உணர்ந்து கொண்ட ஹூண்டாய் புதிய மினி எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் ஹூண்டாயின் புதிய மினி எஸ்யூவி சோதனை செய்யப்பட்டு வரும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
சோதனை செய்யப்பட்ட அந்த மினி எஸ்யூவியின் படங்களை நேவர் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இந்த மினி எஸ்யூவியைத்தான் இந்தியாவில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மினி எஸ்யூவி தவிர, மற்றொரு மினி எம்பிவி காரையும் ஹூண்டாய் களமிறக்க உள்ளது. இரண்டும் ஒரே பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும். ஆனால், மினி எஸ்யூவி 5 சீட்டர் காராகவும், மினி எம்பிவி 6 சீட்டர் காராகவும் இருக்கும்.

புளூயிடிக் டிசைன்
இந்த புதிய மினி எஸ்யூவி புளூயிடிக் டிசைன் தத்துவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியர்
ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான வகையில் இதன் இன்டிரியர் பிரிமியமாக இருக்கும்.

எஞ்சின்
இந்த புதிய மினி எஸ்யூவியை பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

அறிமுகம் எப்போது?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மினி எஸ்யூவியை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் போட்டி
இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








