பாதுகாப்பு அம்சத்தில் ரேஞ்ச்ரோவரை விஞ்சிய ஹூண்டாய் கார்!

பென்ஸ் எம் கிளாஸ் மற்றும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகளை விட ஹூண்டாய் சான்டா பீ அதிக ஆஃப் ரோடு சமாச்சாரங்களில் அதிக பாதுகாப்பு கொண்ட காராக சோதனைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஆட்டோமொபைல் உலகில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு புதிய கவுரவம் கிடைத்திருக்கிறது.
பாதுகாப்பு தர சோதனைகளில் பக்கவாட்டு தடுப்பு சோதனையில் சான்டா பீ 96 சதவீதம் புள்ளிகளை பெற்றது. டி செக்மென்ட்டில் சிறிய பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 89 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது.
இதேபோன்று, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியில் 86 சதவீத புள்ளிகளை பெற்றது. பாதசாரிகள் மீது கார் மோதினால் அதிக காயத்தை ஏற்படுத்தாத ஆக்டிவ் ஹூட் தொழில்நுட்பம் 71 புள்ளிகளை பெற்றது.
மொத்தத்தில் பிற போட்டி மாடல்களை விட அனைத்து பாதுகாப்பு வசதிகளிலும் ஹூண்டாய் சான்டா பீ எஸ்யூவி அதிக புள்ளிகளை பெற்று 2012ம் ஆண்டின் சிறந்த ஆஃப் ரோடு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக ஐரோப்பிய தர சோதனை அமைப்பால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








