சான்ட்ரோவுக்கு மாற்றாக புதிய கார்: ஹூண்டாய் திட்டம்
சான்ட்ரோவுக்கு மாற்றாக புத்தம் புதிய கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் முதல்முதலாக அறிமுகம் செய்த கார் மாடல்தான் சான்ட்ரோ. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து வருகிறது.

இந்த நிலையில், பழமையான மாடலாக இருப்பதால் சான்ட்ரோவுக்கு மாற்றாக புதிய காரை ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது.
ஹூண்டாயின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா நிறுவனத்தின் ரே கார் சான்ட்ரோவுக்கு மாற்றாக கொண்டு வரப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
கியா ரே காரில் பொருத்தப்பட்டிருப்பது 998சிசி பெட்ரோல் எஞ்சின். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்தியாவில் ரே அறிமுகம் செய்யப்படுமேயானால், கப்பா எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.


Click it and Unblock the Notifications








