முட்டை வடிவில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்
பெருகி வரும் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனங்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. 4 சக்கரங்கள், மூன்று சக்கரங்களில் இந்த ரக கான்செப்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது இரண்டு சக்கரங்கள் மட்டுமே கொண்ட 'இ4யு' என்ற பெயரில் புதிய கார் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.
சியோல் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த காரில் ஒருவர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டது. இந்த கார் பேட்டரியில் இயங்கும் என்பதால் சுற்றுப் புற சூழல் மாசுபடுதலை தவிர்க்கும். 500 வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த கார் மணிக்கு 29 கிமீ வேகத்தில் செல்லும்.
எளிதாக பார்க்கிங் செய்ய முடியும் என்பதோடு, அதற்கு துணை புரியும் விதத்தில் பின்புறத்தில் இரண்டு மடக்கி விரிக்கும் வசதிகொண்ட கால்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டை வடிவில் இருக்கும் இந்த அடுத்த தலைமுறை காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்

ஹூண்டாய் இ4யு கான்செப்ட்



Click it and Unblock the Notifications








