ரூ.5.95 லட்சத்தில் ஆட்டோமேட்டிக் கிராண்ட் ஐ10 விற்பனைக்கு வந்தது
மார்க்கெட்டில் சமீபத்தில் வந்து விற்பனையில் பட்டையை கிளப்பி வரும் கிராண்ட் ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடலில் மட்டும் தற்போது ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலை, வசதிகள், வேரியண்ட் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிரான்ஸ்மிஷன்
புதிய கிராண்ட் ஐ10 காரில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்
1.2 லிட்டர் கப்பா எஞ்சினுடன் கிராண்ட் ஐ10 தற்போது ஆட்டோமேட்டிக் மாடலிலும் வந்துள்ளது. இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

வேரியண்ட்டுகள்
கிராண்ட் ஐ10 காரின் ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 2 வேரியண்ட்டுகளில் மட்டும் கிடைக்கும்.

வசதிகள்
பவர் விண்டோஸ், எலக்ட்ரிக் ரியர் வியூ கண்ணாடிகள், 2 டின் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புஷ் பட்டன் ஸ்டார்ட், குரோமியம் பூச்சு கொண்ட டோர் ஹேண்டில்கள், டில்ட் ஸ்டீயரிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அஸ்ட்டா வேரியண்ட்டில் ஸ்பாய்லர், ரியர் டிஃபாகர், புளூடூத், அலாய் வீல்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும், ஆக்சஸெரீஸ்களும் இடம்பெற்றிருக்கின்றன.

விலை
மும்பை எக்ஸ்ஷோரூம் விலை அடிப்படையில், ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.5.95 லட்சம் விலையிலும், அஸ்ட்டா வேரியண்ட் ரூ.6.23 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, டீசல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிராண்ட் ஐ10 விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








